தென்னாப்ரிக்காவில் 'ஒமைக்ரான்' எனப்படும் உருமாறிய வைரஸ் கொரோனா தோன்றியதாக கூறப்படுகிறது. இது இப்போது 14 நாடுகளில் பரவ துவங்கியுள்ளது. இதையடுத்து ஜப்பான், இஸ்ரேல் உட்பட பல நாடுகள் வெளிநாட்டு பயணியர் வருகைக்கு தடை விதித்துள்ளன.

 

"ஒமைக்ரான் வைரஸ் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அனைத்து துறையினருடன் நடத்திய ஆலோசனை அடிப்படையில் டிசம்பர் 15-ல் துவங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து ஒத்திவைக்கப் பட்டுள்ளது.நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் எப்போது துவங்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்". என சர்வதேச விமான போக்குவரத்தை ஒத்தி வைத்து டி.ஜி.சி.ஏ எனப்படும் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


 





இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் புதிய வகை ஓமைக்ரான் (கோவிட்-3) வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணிய மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து., தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மதுரை விமான நிலையத்தில் ஓமைக்ரான் பரிசோதனை மையத்தை துவக்கி வைத்தார் அப்போது ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் துபாயிலிருந்து மதுரைக்கு வந்த 6 குழந்தைகள் உள்பட 174 பேருக்கு மதுரை விமான நிலையத்தில் ஓமைக்ரான் பரிசோதனை செய்ய 18 பேர் அடங்கிய சுகாதாரக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.






தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில்.....,” புதிய வகை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 11 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வருகை தந்த 477 பயணிகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு யாருக்கும் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் விமான பயணிகளை பரிசோதனை செய்ய RTPCR பரிசோதனை திட்டமிடப்பட்டு., அவர்களை பாதுகாப்பாகவும் காத்திருப்பு அறையில் தனியாக தங்க வைக்கப்படுவர்கள் அதன்பின் அவர்கள் வீட்டுக்குச் சென்றவுடன் மேலும்.,  அவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களை கண்காணிக்க சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.



தொற்று பாதிப்பு இல்லாத மற்ற நாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசமாக 2% நபர்களுக்க ஆர்.டி.பி.சி.ஆர் செய்ய தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும்., ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய 600 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அனைத்து விமான பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்., ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து புதிதாக ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்படும் நபர்கள் தனி அறையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்தார். தமிழ்நாடு ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்றும்., ஏற்கனவே இருந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் மட்டுமே தற்போது தமிழ்நாட்டில் உள்ளது. பொது இடங்களில் வருகை புரியும் நபர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்றும்., பல்வேறு இடங்களில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தாலும் டாஸ்மாக் கடைக்கு வருகை தரும் நபர்கள் அனைவருக்கும் தடுப்புசி சான்றிதழ் கட்டாயம் என அந்தந்த ஆட்சித் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் ஓமைக்ரான் வைரஸ் குறித்து முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுத்து விட்டால் ஊரடங்குக்கு அவசியம் இல்லை. தொடர்ந்து பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்தவேண்டும். முகக்கவசம் அணிந்து செல்லுதல் இவை அனைத்தும் இருந்தால் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் பரவல் குறையும்., ஊரடங்கிற்க்கு அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 



 மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மோசமான நிலையில் உள்ளது.  முதல் தவணை செலுத்திய நபர்கள் தமிழ்நாடு அளவில் 78% இருந்த போதிலும் மதுரை மட்டும் 71 சதவீதத்தை உள்ளது, இரண்டாம் தவணை 32% பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர். எனவே மதுரை மக்கள் தயவுகூர்ந்து தடுப்புசி செலுத்தி கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.மீண்டும் மதுரை வரும் பொழுது முன்மாதிரியான மாவட்டமாக இருக்க வேண்டும்.

 

கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு RTPCR பரிசோதனையில் தெரிய வரும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து., விமான பயணிகள் வருகையின் போது புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்களை அனுமதிக்க சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.