கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி கடந்த 25 ஆம் தேதி மத்திய அரசின் மாற்றுத்திறனாளி திட்டத்தின் கீழ் உபகரணங்களை வாங்க கரூர் மாவட்ட ஆட்சியர் கடந்த 6 மாத காலமாக கூட்டம் நடத்தாமல் தவிர்த்து வருவது கண்டனத்துக்குரியது எனக்கூறி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தர்ணா போராட்டம் 25 மணி நேரத்தை கடந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். 




இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் மெகா சிறப்பு முகாம் நடைபெற்றது. அங்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் செய்தியாளரிடம் தெரிவித்தார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட நிர்வாகத்தை குறை கூறிய நிலையில் மாவட்ட நிர்வாகம் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறோம் என பதில் தெரிவித்தார்.




மாற்றுத்திறனாளுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு சரியில்லை என ஜோதி மணி தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் மற்றும் கண் பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆட்சியர் பிரபு சங்கரை பாராட்டி ஆட்சியரை சந்தித்து பாராட்டு கடிதம் அளித்துள்ளனர். 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் 


அதில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்று வாரம் தோறும் முகாம்கள் ஏற்படுத்தி கொடுத்து மாற்றுத்திறனாளி தங்களுடைய விருப்பம் நிதியில் நகர்ப்புற குடியிருப்பு பகுதியான அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தலா ரூ.1.88 லட்சம் மதிப்பீட்டில் இரு நபர்களுக்கு வழங்கியதற்கும், 




மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை ஏற்று 24.10.2021 அன்று கரூர் மாவட்ட அளவிலும், கரூர் தாலுக்கா மற்றும் மன்மங்கலம் தாலுகா அளவிலும், 23.11.2021 அன்று குளித்தலை தாலுக்கா அளவிலும், 24.11.2021 அன்று கடவூர் தாலுகா அளவிலும், 25.11.2021 அன்று அரவக்குறிச்சி தாலுகா அளவிலும், 26.11.2021 அன்று வேலாயுதம்பாளையம் புகலூர் தாலுக்கா அளவிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நடத்தி அதன் மூலம் 1300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் துவங்க கடன் உதவி, முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டம், நலவாரிய பதிவுதல், உதவி உபகரணங்கள், மடக்கு சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர் வண்டி, காதொலி கருவி, செயற்கை கால், கை பிற உதவிகளை பெற என்டர்லேட் லிம்பேட் நிறுவனம் இணைத்து மகாகவி மாற்றுத்திறனாளி பாதுகாப்பு நல சங்கத்தின் அனைத்து பொறுப்பாளர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இனைத்து வாய்ப்பை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் ஐயா அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.




மேலும் 23.11.2021 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்புற நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10000 வீதம் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க மாவட்ட ஸ்டேட் பாங்க் வங்கியின் மூலம் முதல் கட்டமாக 20 நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ததற்கும், மாற்றுத்திரனாளிகளின் நலன் கருதி சிறப்பு வசதியுடன் பயணிக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் "விடியல் வீடு" ஏற்பாடு செய்துமைக்கும்,  கொரோனா இரண்டாவது அலையின்போது தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் முதன்மையாக மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி காத்ததற்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்கள்.




மேலும், கண்பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக தெரிவிக்கையில் எங்களுக்காக நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள், புதிய அட்டை அடையாள அட்டைகள், உதவித்தொகை அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிக்கு அட்டை பதிவு செய்யப்பட்டதற்கும், இலவச பஸ் பாஸ்க்கு பரிந்துரை செய்யப்பட்டதற்கும், இந்தியாவிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர் காமராஜ் என்பவருக்கு பிரத்தியோகமான வீடு கட்டுவதற்கு 26.11.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் ஆலோசனைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடத்தியதற்கு சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். என தெரிவித்துள்ளார்கள்.