பிச்சைக்காரன் 2 படத்தில் நடிக்க ஏற்றவர் மகேஷ்பாபு தான் என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.


விஜய் ஆண்டனி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இத்திரைப்படம் மே 19-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.


இத்திரைப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் ஒருவர் தெலுங்குவில் இத்திரைப்படத்தை நடிக்க ஏற்ற நடிகர் யார் என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, இந்த கதைக்கு தேவையான எக்ஸ்பிரெஷன், ரியாக்சன் எல்லாவற்றையும் கொடுக்க ஏற்றவர் மகேஷ் பாபு தான் என்று கூறினார்.


விஜய் ஆண்டனி தன்னை ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடகராக, நிரூபித்த நிலையில், நடிப்பிலும் தன் திறமையை வெளிக்காட்டி வருகிறார். இவரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் பிச்சைக்காரன் படத்திற்கு தன் நண்பன் கரெக்டா இருப்பான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விஜய் ஆண்டனி. 


முன்னதாக பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராஜகணபதி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 2016ஆம் ஆண்டு ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் நான் தயாரித்த ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கதையை காப்பியடித்து பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி உருவாக்கி உள்ளார். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் நஷ்ட ஈடாக 10 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.


இவ்வழக்கில் விஜய் ஆண்டனி தாக்கல் செய்த பதில் மனுவில், ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் தனக்கு தெரியாது என்றும் அந்த படத்தை தான் பார்த்தது கூட இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், இரு படங்களுக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.


வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சௌந்தர் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட விஜய் ஆண்டணிக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளார். 


மேலும் படிக்க


Gold, Silver Price: மகிழ்ச்சி தரும் செய்தி.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..!


Crime : குழந்தை கேட்டு நச்சரித்த காதலி... கழுத்தறுத்து கொலை செய்த காதலன்... கேரளாவில் பயங்கரம்...!