Crime :  கேரளாவில் குழந்தை கேட்டு நச்சரித்த காதலியை, அவரது காதலன் கழுத்தறுத்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உடுமாபாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா (34). இவர் அழகு கலை நிபுரணராக இருந்தார். இவருக்கு கணவர் மற்றும் இரு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில், இந்த பெண்ணுக்கு காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிக்காணம் என்ற பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சதீஷ் என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.


இந்நிலையில், இருவரும் திருமணத்தை மீறிய உறவில் 9 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளனர். இதனிடையே சதீஷின் குழந்தையை தேவிகாவுக்கு பிடித்து போனதால், அவரது குழந்தையை கேட்டு நச்சரித்து வந்துள்ளார். மேலும், தேவிகாவே வளர்ப்பதாக பலமுறை கூறி சதீஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் தனியார் விடுதியில் சந்தித்தனர். அப்போது, தேவிகா, சதீஷிடம் குழந்தை பற்றி மீண்டும் கேட்டு நச்சரித்துள்ளார். 


அப்போது இருவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதனை அடுத்து ஆத்திரத்தில் பழம் வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து தேவிகாவின் கழுத்தை அறுத்து சதீஷ் கொலை செய்துள்ளார்.


இதனை அடுத்து, ரத்தக்கறையுடம் விடுதியில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனை பார்த்த விடுதியின் காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர். அப்போது, "என்னை வாழ விடவில்லை, எனது குழந்தையை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த ஆத்திரத்தில் தான் தேவிகாவை கொலை செய்தேன்” என வாக்குமூலம் அளித்தார் சதீஷ். இதனை அடுத்து, காதலியை கழுத்தறுத்து கொலை செய்த குற்றத்திற்காக சதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  குழந்தை கேட்டு நச்சரித்த காதலியை, அவரது காதலன் கழுத்தறுத்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


சாராயம் விற்று குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு - செஞ்சி மஸ்தான்