கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான  பணிகள் நடைபெற்று வருவதை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,


 




 


தமிழகத்தில் ஏற்கனவே 26 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் நடைபெற்று வருகிறது நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்ததன் அடிப்படையில் வருகின்ற கல்வியாண்டு முதல் கரூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்க உள்ளது.  இந்தப் பள்ளி 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் நடைபெற உள்ளது. இப்பள்ளியில் 400 மாணவர்களும் 400 மாணவியர்களும் தங்கும் விடுதி வசதியுடன் செயல்பட உள்ளது. இப்பள்ளியில் 19 முதுகலை ஆசிரியர்களும் 10 பட்டதாரி ஆசிரியர்களும் பணிபுரிந்து பாடங்களை நடத்த உள்ளார்கள். அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக அமைக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்களை தவிர உயர்கல்வி படிப்பதற்கான போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் குறிப்பாக எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழக அரசு இப்பள்ளியை நடத்த உள்ளது. அதற்காக மாயனூர் ஆசிரியர் பயிற்சி  மைய வளாகத்தில் கரூர் அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என ஆட்சியர் தெரிவித்தார்.


 




இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் (கட்டடம்) சச்சிதானந்தம், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் திரு. மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.