அ.தி.மு.க.,வில் ஒ.பி.எஸ்., இணைவது குறித்து அவர் நல்ல முடிவெடுப்பார் - அ.தி.மு.க., ஒன்றுபட்ட இயக்கமாக இணைந்து செயல்பட்டால் 2026 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அம்மாவின் கனவு நிறைவேற்றப்படும் - என ஒ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேட்டி.
ரஜினிகாந்த் பிறந்த நாள்விழாவில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி ரஜினி ரசிகர்கள் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு, கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
உசிலம்பட்டி எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அய்யப்பன்...,” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடு, எம்.ஜி.ஆர், அம்மா, ஒபிஎஸ், டிடிவி தினகரன் அவர்களின் நல்லாசியும் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இபிஎஸ், ஒபிஎஸ் இணைய அனுமதி அளித்துள்ளதாக பரவும் செய்தி குறித்த கேள்விக்கு,
அதிமுகவில் ஒபிஎஸ் இணைவது குறித்து அவர் நல்ல முடிவெடுப்பார் என்றும், அதிமுக ஒரே இயக்கமாக, ஒன்றுபட்ட இயக்கமாக இணைந்து செயல்பட்டால் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று அம்மாவின் கனவு நிறைவேற்றப்படும் என பேட்டியளித்தார்.,