Madurai Power Shutdown: மதுரை மாவட்டம்உசிலம்பட்டி பகுதிகளில் (22.11.2024) நாளை மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உசிலம்பட்டி பகிர்மானம் செயற்பொறியாளர் கோ.வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22.11.2024 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை)
உசிலம்பட்டி துணைமின்நிலையம்
உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, K.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிப்பட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்
தும்மக்குண்டு துணைமின்நிலையம்
சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்கோவில்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, வாகைக்குளம், அழகுசிறை, சலுப்பபட்டி, P.மேட்டுப்பட்டி
இடையபட்டி துணை மின்நிலையம்
மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி, அறிவொளி நகர்
மொண்டிக்குண்டு துணைமின்நிலையம்
உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம்புதூர்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai ; மீனாட்சி அம்மன்கோயில் யானை பார்வதி நலனில் தனிக்கவனம் - அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Maharashtra Exit Poll 2024: ட்விஸ்ட் மேல் ட்விட்ஸ்ட்.! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு .!