மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்:
மகாராஷ்டிரா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலானது, இன்று ஒரே கட்டமாக மாநில முழுவதும் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது வரும் நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இங்கு 48 மக்களவை தொகுதிகளும், 288 சட்டப்பேரவை தொகுதிகளும் உள்ள மாநிலம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாயந்த மாநிலமாக பார்க்கப்படுகிறது.
மேலும், அரசியல் ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலானது, தேசிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால, மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணியும் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடரவும் காங்கிரஸ் கூட்டணியும் முனைப்பில் உள்ளன.
மகா விகாஸ் அகாதி vs மகா யுதி
இந்நிலையில், மகா விகாஸ் அகாதி கூட்டணியும், மகா யுதி கூட்டணியும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டன. மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனாவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளன.
மகா யுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று மாலை வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
கருத்து கணிப்பு முடிவுகள்:
MATRIZE வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில். பெரும்பான்மைக்கு 145 தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணிக்கு 150 முதல் 170 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 110 முதல் 130 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சி.என்.என் - பி மார்க் கருத்துக் கணிப்பின்படி மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 154 தொகுதிள் வரை வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணிக்கு 128 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என கணித்துள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு கணிப்புகளில் பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் , People Plus வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் , பாஜக கூட்டணி 175 முதல் 195 தொகுதிள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 85 முதல் 112 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
Also Read: அனலாக பரவும் தஞ்சாவூர், ஓசூர் விவகாரம்: இபிஎஸ், செல்வப்பெருந்தகை, அண்ணாமலை, அன்புமணி சொன்னது என்ன?