MP Su Venkatesan : எம்பி வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி ; என்ன ஆச்சு ?

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் சிபிஎம் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட மதுரை எம்பி வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சு வலி

Continues below advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்று வரும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது தமிழ்நாடு மாநில மாநாடு விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை கட்சியினர்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . 

Continues below advertisement

இது சம்பந்தமாக மருத்துவர்கள் கூறுகையில் பயப்படும்படி எதுவும் இல்லை இன்னும் ஒரு மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு 

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம்  துவங்கியுள்ளது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கினைப்பாளரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத், பெண்கள் சங்க பொதுச்செயலாளர் பிருந்தா காரத், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் முத்தரசன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola