தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் தினத்தன்று வழங்கும் விருதுகளில், 'திருவள்ளுவர் விருது' புலவர் மு.படிக்காராமுவுக்கு அறிவிப்பு. 'பேரறிஞர் அண்ணா விருது' எல். கணேசனுக்கும், 'பாரதியார் விருது' கவிஞர் கபிலனுக்கும் வழங்கப்பட உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்து வாவாசிக்கு வழங்கப்பட உள்ளது.
நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். இதில் பல்வேறு ஆய்வாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7-11 செ.மீ வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக எம்.பி., மருத்துவமனையில் அனுமதி
விழுப்புரத்தில் சி.பி.எம். கட்சியில் மாநில மாநாட்டிற்காக வந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி. மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் மருத்துமனையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்
ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைப்பு
பொங்கல் விடுமுறையை ஒட்டி அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு. வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது உள்ளிட்டவற்றை இந்த குழு கண்காணிக்கும் என போக்குவரத்து ஆணையரகம் தகவல்.
சாதியின் பெயரால் விஷம்
டெல்லியில் கிராமீன் பாரத் மஹோத்சவத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ”சாதியின் பெயரால் சமூகத்தில் விஷத்தை பரப்ப சிலர் முயற்சிப்பதாக கூறியி பிரதமர் மோடி, கிராமப்புற மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே தனது அரசின் முன்னுரிமை” என தெரிவித்தார்.
கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு
மத்திய பிரதேசத்தில் ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியிலிருந்து 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில், 4 பேரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிறை செல்கிறாரா ட்ரம்ப்:
பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்த நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்க்கு வரும் 10ம் தேதி தண்டனை விபரங்களை அறிவிக்கிறது நீதிமன்றம். வரும் 20ம் தேதி அவர் நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ளார். இவ்வழக்கில் சிறை தண்டனை இல்லாமல் அபராதம் மட்டும் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல். எனினும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் நுழையும் முதல் அதிபர் என்ற மோசமான பெயர் அவருக்கு கிடைக்க உள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்த இந்தியா
இந்திய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. சிட்னியில் நடைபெற்ற 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்துள்ளது.
WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுத் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை முதல் முறையாக இழந்தது இந்தியா. 2019-21 மற்றும் 2021 -23 ஆகிய இரு முறையும் தொடர்ச்சியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வி அடைந்தது இந்திய அணி.