இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்களை வழங்க அனுமதி வழங்கிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இலங்கை நாட்டு மக்களுக்கு உதவி நோக்கில், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு முன்வந்துள்ளதாகவும், அதற்கு மத்திய அரசின் அனுமதியும் பெற வேண்டி, கடந்த இரண்டு நாடுகளுக்கு முன்பு, அனுமதியை உடனே வழங்கக்கோரி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கடும் பொருளாதார சிக்கலில் தவித்துவரும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடிதம் வழியாக தகவல் அளித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தைப் பதிவிட்டு, அதோடு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவீட்டில், ’ இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக , மாண்புமிகு ஜெய்சங்கர் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என் நன்றிகள்.இந்த மனிதாபிமானமிக்க செயல் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும்.மேலும், இது இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த உதவும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எங்கும் நல்லெண்ணம் வளரட்டும்.’ என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்