தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவரக்கூடிய நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தனக்கு ஜாமின்கோரி தொடர்ந்து மனுவானது நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரகு கணேஷ் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்ட நிலையில் கொலை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்
சிங்கம் சின்னம் ஒதுக்க கோரிய பார்வர்டு பிளாக் வேட்பாளர் மனு - சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம்
மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த புகழேந்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் மதுரை மாநகராட்சியின் 86 வது வார்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் போட்டியிடுகிறேன். எனது வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், 7ஆம் தேதி மாலை 6.15 அளவில் உதவி தேர்தல் அதிகாரி தரப்பில் எனக்கு சிங்கம் சின்னமாக ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. தகவல் பலகையிலும் அவ்வாறு தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் 10 ஆம் தேதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றது. அதில், " படிவம் A மற்றும் படிவம் B ஆகிய 2 படிவங்களும் தாக்கல் செய்யப்பட்டதால் என்னை சுயேச்சை வேட்பாளராக கருதி உலக உருண்டை எனக்கு சின்னமாக வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
வேட்பு மனு தாக்கலின் போது படிவங்கள் இரண்டும் ஏற்கப்பட்டு, எனக்கு சிங்கம் சின்னமும் கொடுக்கப்பட்டது. அப்போதும் உடன் போட்டியிடுவோர் தரப்பில் எவ்விதமான ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக 2 நாட்களுக்குப் பிறகு எனக்கு வழங்கப்பட்ட சின்னம் மாற்றப்பட்டு, உலக உருண்டை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 7ஆம் தேதி மாலை முதல் அனைத்து பகுதிகளிலும் சிங்கம் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்த நிலையில், இதுபோல சின்னத்தை மாற்றி வழங்கியது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, சிங்கம் சின்னத்தையே எனக்கு வழங்கவும், அதுவரை மதுரை மாநகராட்சி 86 வது வார்டில் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். நிர்வாக காரணங்களுக்காக வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.