கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளை யோகா மையத்திற்கு முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டியதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தது வந்தது. இந்த நிலையில், இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கள் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுப்பிய நோட்டீசில், விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதால் ஏன் வழக்கு தொடரக்கூடாது..? ஈஷா அறக்கட்டளைக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.




இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


மேலும், கோவை ஈஷா அறக்கட்டளையின் யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும் என்றும், எனவே 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1.25 லட்சம் சதுரமீட்டர் கல்வி நிலையம் உள்ளதால் விலக்கு பெற உரிமை உள்ளதாகவும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது , மத்திய அரசு சார்பில் கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த தீர்ப்புக்கு ஈஷா அறக்கட்டளை வரவேற்பு தெரிவித்திருப்பதுடன், ஈஷா அறக்கட்டளை எப்போதும் சுற்றுச்சூழலை காப்பதிலும், அனைத்து சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதிலும் உறுதியாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளது.  


மேலும் படிக்க : Minister Udayanidhi Stalin: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் 5 பேர் நியமனம்; யார், யார்?- விவரம்


மேலும் படிக்க: Minister Udhayanidhi Stalin: ’இனி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன்.. மாமன்னன் திரைப்படம்தான் கடைசி’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்