நெடுஞ்சாலை விரிவாகத்துக்காக செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சசிகலாவின் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2010-ம் ஆண்டு ஓஎம்ஆர் சாலை விரிவாக்கத்துக்காக பையனூர் தோட்டத்தின் ஒரு பகுதியை கையப்படுத்துவதற்கான நடவடிக்கையை வட்டாட்சியர் மேற்கொண்டார். இதுதொடர்பாக உரிய இழப்பீடு வழங்குவதற்காக சசிகலாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், 2011-ஆன் ஆண்டில் நில எடுப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து சசிகலா தரப்பினர் நீதிமன்றத்தை அணுகினர்.

நில எடுப்பு சட்டத்துக்குட்பட்டு நெடுஞ்சாலை துறை நிலத்தை கையகப்படுத்தவில்லை என்று தெரிவித்தார். இதன் காரணமாகவே, நிலத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் நில உரிமையாளர்கள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. எனவே, இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் பதில்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணிக்காவும் தேவைப்படுகிறது என்று அரசுக்கு தோன்றுவதால், அதன்படி தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு நில எடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டது.  இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பாதால், நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை. நிலங்களுக்கான  இழப்பீட்டுத் தொகையினை வழங்க நெடுஞ்சாலைத் துறை தயாராக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரான சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார். 

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சசிகலாவிற்கு தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை (கடந்த 8ம் தேதி) முடக்கி சீல் வைத்தது. 

பையனூர் பங்களாவை பூட்டி சீல் வைத்த வருமான வரித்துறை, அதற்கான காரணத்தை விவரிக்கும் வகையில் பத்து பக்கங்கள் உடைய நோட்டீசையும் பங்களா முகப்பில் ஒட்டியுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் இந்த சொத்தின் மூலம் ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பங்களா முடக்கப்பட்டது குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகிய இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்தது. 

மேலும், வாசிக்க: 

சசிகலாவின் ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்... பினாமி சொத்துக்களுக்கு ஆபத்து!

Sasikala Payyanur Bungalow: சசிகலா VS கங்கை அமரன்: இன்னும் பைசலாகாத பையனூர் பண்ணைவீடு பஞ்சாயத்து!