சென்னை கொரட்டூர் , கெனால் சாலையில் உள்ள தனியார் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில்  நேற்று மாலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத 16 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொரட்டூர் போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.




கொரட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனி எம்ஜிஆர் தெருவில் வசிக்கும்  பாஸ்கர் மற்றும் ராமலட்சுமி தம்பதியின் மகள் என்பது தெரியவந்தது. பாஸ்கர் அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை வியாபாரம் நடத்தி வருகிறார். இந்நிலையில் முதல் மகள் வைஜெயந்தி (16) அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள வேலம்மாள் பகுதியில் , 11-ஆம் வகுப்பு  படித்து வருகிறார் . மகள் வைஜயந்தி நீண்ட நாட்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டு படித்து வந்துள்ளார்.


சில வாரங்களுக்கு முன் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி  வைஜயந்தி வாரத்தில் வியாழன் முதல் சனிக்கிழமை வரை 3 நாட்கள் மட்டுமே வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. வழக்கமாக நேற்று காலை 7:30  மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி தனியார் வேன் மூலம், பள்ளிக்குச் சென்று மாலை அதே தனியார் வேன் மூலம் 5 மணிக்கு வீட்டிற்கு வருவது வழக்கம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் நேற்று மாலை வழக்கம் போல் வீட்டிற்கு வராததால் பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். வேன் ஓட்டுனர் இடமும் விசாரித்துள்ளனர். அச்சமயத்தில் உயிரிழந்த பெண்ணின் பள்ளி அடையாள அட்டை மூலம், கொரட்டூர் காவல் நிலையத்தில் இருந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.  இதனை அடுத்து நேரில், சென்று பார்த்தபொழுது தற்கொலை செய்து கொண்டது தன் மகள் என்பதை பெற்றோர் உறுதி செய்தனர்.


மகள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பாஸ்கர் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த பிறகு தனது மகள் கடந்த சில வாரமாக பள்ளிக்கு சென்று படித்து வருவதாகவும், ஒரே ஒரு பாடத்தில் மட்டும் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு புகார் அளித்ததார். இதுகுறித்து தனது மகளிடம் ஏன் சரியாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என கேட்டேன். அதன் பிறகு இன்று வழக்கம்போல் காலை பள்ளிக்குச் சென்ற மகள் மாலை வராததால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் காவல் நிலைய தகவலின் அடிப்படையில் மகள் உயிரிழந்ததை தெரிந்து கொண்டதாக” கூறினார்.


இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் இருக்கலாம். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .