முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகெடு வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுகவின் ஆர்.எஸ். பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி மனு தாக்கல் செய்திருந்தார்.


முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 


மேலும் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என தெரிவித்தது. 


இதன் அடிப்படையில், வழக்கை முடித்து வைக்கக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதற்கிடையே, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். 


உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகால விசாரணையின் அறிக்கை எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு வழங்கப்பட்ட நிலையில், அறப்போர் இயக்கம் மற்றும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி மூனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் கொண்ட அமர்வில் ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 


அப்போது தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.


இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், விசாரணை தொடரந்து நடைபெறலாம் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது எனவும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு  உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண