தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஊரக இளைஞர்களுக்கு தீனதயாள் உபாத் தியாய கிராமின் கௌசல்ய யோஜனா மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி, ஊரக பகுதிகளில் சுய வேலைவாய்ப்பு பெற நிறுவனத்தின் பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் மூலம் ஊரக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் 7/4/2022 அன்று சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும் அரசு துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து அனைத்து வட்டாரங்களிலும் "இளைஞர் திறன் திருவிழாக்கள்" நடத்தப்பட உள்ளது. இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்பு உள்ள தொழில்களை பற்றி அறிந்து கொள்வதோடு, திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களையும் ஒருங்கே பெறுவதற்கும், திறன் பயிற்சி பெறுவதற்கும் இந்த இளைஞர் திறன் திருவிழாக்கள் பேருதவியாக அமையும் என தெரிவித்துள்ளார்.




கரூர் மாவட்டத்தில் 16.8.2022 அன்று தென்னிலையில் அமைந்துள்ள அருள்முருகன் பொறியியல் கல்லூரியில் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை "இளைஞர் திறன் திருவிழா" நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் கரூர் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்படும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. எனவே ஆர்வம் உள்ள இளைஞர்களும், பெண்களும் தங்களின் கல்வி தகுதிக்குரிய ஆவணங்களுடன் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு அவரவர் கல்வி மற்றும் திறனுக்கு ஏற்ப வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.




 


உரிமம் இன்றி இயங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தகவல்


கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் நடத்துவதற்கு உரிமம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது, கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் உரிமங்களை, அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் விடுதிகள் நடத்துவதற்கான உரிமங்களை உரிய அலுவலர்கள் மூலம் மனு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், தொழிற்சாலையில் பணிபுரியும் மகளிர் விடுதிகளும் நிறுவனத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ நடத்திட உரிய அனுமதி பெறுவதற்கான வழி காட்டுதல்களை மாவட்ட சமூகநல கூட்டத்தில், அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், தாசில்தார் ஆகிய அலுவலர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.




பின், உரிமம் இன்றி இயங்கும் அனைத்து விடுதிகளின் நிர்வாகிகள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிமத்திற்குரிய விண்ணப்பங்கள் மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ அல்லது இணையதலம் வழியாக பெற்றுக்கொள்ள வேண்டும். தேவைப்படும் ஆவணங்களை பூர்த்தி செய்து மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண