கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.  பின்னர், மாலை தீர்ப்பின் முழுவிரவம் வெளியானது. அதன் முழுவிவரம் என்ன? தெரிந்து கொள்ளலாம்.


சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு:


 சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் எதுவும் தனித்தனியாக நடத்தப்படக்கூடாது என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பொதுக்குழுவை கூட்ட ஒரு ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.




 

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஜூலை 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாதது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய முடிவுகளும் தானாகவே ரத்தாகிவிட்டது.  இதனால், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள் தானாகவே ரத்தாகிவிட்டது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது அனைத்தும் தானாகவே செல்லாத நிலைக்கு வந்துவிட்டது.


தீர்ப்பின் முழு விவரம்:


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் வழங்கிய தீர்ப்பின் முழுவிவரம்.


ஜூலை-11 ஆம் தேதி நடட்தப்பட்ட பொதுக்குழு தகுதியான நபரால் கூட்டப்படவில்லை. 15 நாட்களுக்கு முன்பு எந்த அறிவிப்பும் இல்லாமல் நடத்தப்பட்டதும் முறையானது அல்ல. 


தற்காலிக அவைத் தலைவர் ஒருபோதும் பொதுக்குழுவை நடத்த முடிவெடுக்க முடியாது. 


ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளார் பதவி காலம் முடிவடைந்தது குறித்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இந்தப் பதவிகளின் காலம் முடிந்துவிட்டதாக சொல்வது கற்பனையானது என்று நீதிமன்றம் சாடல். 


ஜூன், 23 ஆம் தேதி அன்றே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் முடிவடைந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை. 


அ.தி.மு.க. கட்சி விதிகளை மீற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூடி மறைக்கும் வகையில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. 


கூட்டணி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து இருவரும்தான் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர். 


ஒன்றறை கோடி தொண்டர்கள் திடீரென எப்படி ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற மனநிலைக்கு மாறினர்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 


இரட்டை தலைமையில்தான் அ.தி.மு.க. கட்சியையும் அரசையும் நடந்தி வந்துள்ளனர்.


ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து நடத்தும் பொதுக்குழுவே செல்லும். தனிக் கூட்டம் கூட்டக் கூடாது.


பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்.




மேலும் படிக்க..Krishna Jayanthi 2022: கோகுலத்து கண்ணனை வரவேற்கும் கிருஷ்ண ஜெயந்தி! வரலாறு என்ன?


மேலும் படிக்க.. Krishna Jayanthi Pooja: கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை... எப்படி கொண்டாடுவது?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.