2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை வேலைநாட்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21 முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. செமஸ்டர் தேர்வுக்குப் பின் மீண்டும் 2023 ஜனவரி 23-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு எப்போது?
2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு ஆக.20ஆம் தேதி தொடங்க உள்ளது. குறிப்பாக சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கும்இதற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை நேற்று (ஆக.16) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.
பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 27 வரை 2,11,115 மாணவர்கள் விண்ணப்பித்தனர். 1,67,387 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினர். இதில் இருந்து 1.58 லட்சம் மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியானது.
இந்நிலையில் 2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அறிவித்துள்ளது.
2ஆம் ஆண்டு வகுப்புகள் எப்போது?
பொறியியல், பி.டெக்., பி.ஆர்க். முழு நேரப் படிப்புகளுக்கும் பொறியியல், பி.டெக்., பகுதிநேரப் படிப்புகளுக்கும் 3ஆவது செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்குகின்றன. அதேபோல எம்பிஏ முழு நேர மற்றும் பகுதிநேரப் படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த எம்பிஏ படிப்புக்கும் அதே நாளில் 2ஆம் ஆண்டு வகுப்புகள் தொடங்க உள்ளன. இவர்களுக்கு டிசம்பர் 8ஆம் தேதி வகுப்புகள் நடக்கும்.
இந்த மாணவர்கள் அனைவருக்கும் டிசம்பர் 10 முதல் செமஸ்டர் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. டிசம்பர் 21 முதல் செமஸ்டர் தியரி தேர்வு நடைபெற உள்ளது. செமஸ்டர் தேர்வுக்குப் பின் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.
பல்வேறு வித கற்றல் இணைச் செயல்பாடுகளால், குறைவாகவே வகுப்புகள் இருந்தால், சனிக்கிழமைகளில் கல்லூரிகள் செயல்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்