நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கிலோமீட்டர் முதல் 120 கி.மீ., வரை செல்லாம் என்ற மத்திய அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பல் மருத்துவர் இழப்பீடு கோரிய வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், சாலை மேம்பாடு, எஞ்சின் செயல்பாட்டை அதிகரிக்க வேகம் அதிகரிக்கப்பட்டதாக அரசு கூறிய விளக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.