அரசியல், இலக்கியம், பத்திரிக்கைத்துறை, நாடகம், சினிமா உள்ளிட்ட பலதுறைகளில் கோலோச்சியவர் திருக்குவளையில் பிறந்த மாணிக்கம் கலைஞர் மு.கருணாநிதி. தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர். வாழும்காலம் முழுக்க தமிழின் மீதும், தமிழர்களின் மீதும் பெருங்காதலோடு இருந்தார். மாநில உரிமை, சமூகநீதி, சுயமரியாதை உள்ளிட்ட பல கொள்கைகளின் வழியே வாழ்ந்துக்காட்டியவர். திராட கொள்கைகளும் திராவிட இயக்கமும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடங்கி, அதன் வளர்ச்சிக்கு தன்னை அர்பணித்துக் கொண்டவர். அவரின் 99 வது பிறந்தநாளான இன்று அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டவர்களின் வாழ்த்துச் செய்திகளின் தொகுப்பு இது.