சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 4-இல் ஒருவருக்கு உடல் சோர்வு, உடல் வலி, இருமல் தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம், தூக்கமின்மை உள்ளிட்ட உபாதைகளை எதிர்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கொரோனா தொற்றுக்கு பிந்தைய உபாதைகள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையம் மேற்கொண்டுள்ளது. குணமடைந்த நோயாளிகள் ஏதேனும் உடல் உபாதைகள் எதிர்கொண்டால் காணொளி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் சென்னை மாநகராட்சி மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் மருத்துவர் P.C. ரூபேஷ்குமார் , பரவுநோயியல் நிபுணர், ICMR - NIE, சென்னை இந்த அறிக்கையை முன்னதாக அறிக்கையை சமர்ப்பித்தார். 

 


 

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 1001 பேரிடம் தொலைபேசி அழைப்புகள் மூலமாக தொடர்பு கொண்டு உபாதைகள் குறித்து கேட்டறியப்பட்டது. ஆய்வறிக்கையில் கீழ்க்கண்ட சில முக்கிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. 

 


  1. மிதமான அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளிகளை விட மூச்சுத் திணறல் போன்ற கடுமையான நிலைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனாவுக்கு பிந்தைய உபாதைகள் அதிகமாக காணப்படுகிறது.

  2. 4ல் ஒருவருக்கு (238) உடல் சோர்வு, உடல் வலி, இருமல் தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம், தூக்கமின்மை உள்ளிட்ட உபாதைகளை எதிர்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.

  3. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 12-14 வாரங்களுக்குப் பின்பும், 1.6% (16)பேர் தொடர்ச்சியான மூச்சுத்திணறல் சிரமங்களை சந்தித்து வருகின்றனர் .   

  4. நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ ஆக்சிஜன் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளில் 41 சதவிகிதம் பேர் ஏதேனும் ஒரு உபாதைகளை எதிர்கொண்டுள்ளனர்.      

  5. கொரோனா நோய்த் தொற்றின் போது எந்தவொரு அறிகுறி இல்லாத நோயாளிகளில் 4 சதவிகிதம் பேர் ஏதேனும் ஒரு உபாதைகளை சந்தித்துள்ளனர்.  


இதற்கிடையே, சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனாவுக்குப் பிந்தைய சிரமங்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.




கொரோனாவுக்கு பிந்தைய உபாதைகள் கொண்ட நபர்களுக்குக் காணொளி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் Vidmed செயலி, வாட்ஸ்ஆப் செயலி மற்றும் மனநல ஆலோசனைகள் தொடந்து செயல்படும். வாட்ஸ்அப் எண்: 9498346510/11/12/13/14. 


9498015100/9498015200/9498015300/9498015400 போன்ற தொலைபேசி அழைப்புகள் மூலமாக கொரோனாவுக்கு பிந்தைய சிரமங்கள் குறித்து பொது மக்கள் பேசலாம். 


கொரோனா தொற்றில் குணமடைந்த பிறகு,  தினசரி யோகாசன பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி, சரிவிகித உணவு, போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு, புகைபிடித்தல் மற்றும் குடி பழக்கத்தை தவிர்த்தல் ஆகியன வழிமுறைகலை தனிநபர்கள் கடைபிடிக்கவேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் முன்னதாக தெரிவித்தது. 


டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் ஷாக் தகவல்..!