சென்னை காவல்துறை தனிப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணலி பகுதியில் பாதுகாப்பில் பணியில் பொழுது அப்போது ரேவதி என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்பொழுது ரேவதியின் சிறுமியிடமும் பாலியல் சீண்டல் ஈடுபட்டுள்ளார். மேலும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அவர் தாய்க்கும் தெரிந்து இருக்கிறது . இருந்தும் ரேவதி தனக்கும் காவல் அதிகாரி சதீஷுக்கும் இருக்கும் உறவினை தன்னுடைய தந்தையிடம் தெரிவிக்ககூடாது என மிரட்டியும் வந்துள்ளார். இந்த சிறுமியை துப்பாக்கி காட்டி சதீஷ்குமார் மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதற்காக ரேவதிக்கு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் 50 ஆயிரம் ரூபாய் பணமும் அளித்து உள்ளதாக போலீஸ் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ரேவதியின் மூத்த சகோதரியும் சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்த புகாரை சிறுமியின் தந்தை பல முறை கொடுத்ததாகவும் சதீஷ் காவலர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது . இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை கொடுக்கப்பட்ட புகாரின் உண்மைத்தன்மையை அறிந்து கொண்ட காவல்துறையினர் தற்போது அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து மாதவரம் மகளிர் காவல்நிலையத்தில் மிரட்டியது கொலை செய்ய முயற்சி செய்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சதீஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
போக்சோ வழக்கு போடப்பட்ட சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் சதீஷ்க்கு உறுதுணையாக இருந்த தாய் மற்றும் சிறுமியின் பெரியம்மா ஆகியோர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த மாதவரம் மகளிர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களையும் புழல் சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டு இருப்பதும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதற்கு உடந்தையாக சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவும் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.