நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


சிறப்பு பேருந்துகள்:


2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 092 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 184 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3 ஆயிரத்து 080 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


முன்பதிவு:


மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் ஏப்ரல் 18 அன்று சென்னையிலிருந்து புறப்படவுள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 16 மற்றும்ஏப்ரல் 17 ஆகிய தினங்களில் சென்னையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முன்பதிவில் காலியாக உள்ள இருக்கைகளின் விபரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.


சென்னையில் இருந்து நாளை (ஏப்ரல் 16) இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மொத்தம் உள்ள 30,630 இருக்கைகளில் 1,022 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 29, 608 இருக்கைகள் காலியாக உள்ளன. ஏப்ரல் 17-ஆம் தேதி இயக்கப்படும் பேருந்தில் மொத்தம் உள்ள 31,308 இருக்கைகளில் 6,475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 24 ஆயிரத்து 833 இருக்கைகள் காலியாக உள்ளன. 


சூடுபிடிக்கும் பிரச்சாரம்:


எனவே ஏப்ரல் 18 அன்று கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு  ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 17 ஆகிய நாட்களில் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.  18 ம் தேதி மாலைக்குள் வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு பதிவு மையத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு அன்று காட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலதுறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: ABP C Voter Opinion Poll: கர்நாடகத்தில் அதிரடி திருப்பமா? மேற்கு வங்கத்தில் நடக்கப்போவது என்ன? ABP-சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்