விழுப்புரம்: தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே சண்டையை மூட்டிவிடுவது திமுகவும், அதிமுகவும் தான் என்றும் கூட்டணிக்கு நாங்கள்  செல்லவில்லை என்றால் நாங்கள் துரோகி, பழனிச்சாமி என்ன தியாகியா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.


தேர்தல் பரப்புரை பிரச்சார பொதுக்கூட்டம்


விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டியில் தேர்தல் பரப்புரை பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்புமணி ராமதாஸ்...


தமிழகத்தில் மிகப்பெரிய அலை பாமக பாஜக கூட்டணிக்கு சாதகமாக வீசிக்கொண்டு இருப்பதாகவும் விழுப்புரம் தொகுதியில்  பாமக தான் வேண்டும் என மக்கள் முடிவு செய்விட்டதாகவும், 57 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்யும், திமுக, அதிமுக வேண்டாம் என தமிழக இளைஞர்கள் நினைப்பதாகவும்  மது பழக்கத்திற்கு அடிமையாக்கும் இரு கட்சிகளும் வேண்டாம் என தெரிவித்தார். தமிழகத்தில் பல வடிவில் போதை பொருள் அதிகரித்துள்ளதாகவும்  நமது வேட்பாளர் படித்தாவர், இளைஞர் அவருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றும்  கடந்த விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் தவறு செய்துவிட்டதாகவும் விழுப்புரம் தொகுதி அப்படியே தான் இருப்பதாகவும் இட இடதுக்கீடு கொடுப்பதாக கூறி இரு கட்சிகளும் நம்மை ஏமாற்றிவிட்டனர்.


விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்


விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார். தேர்தல் வந்தால் தான் தி.மு.க.விற்கு மக்கள் நியாபகம் வருகிறது. வன்னியருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்டபோராட்டம் நடத்துவதாக உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். கையெழுத்து போடும் இடத்தில் இருக்கும் இவர்கள் சட்டப்போராட்டம் நடத்துவதாக கூறுவது ஏமாற்று வேலை என தெரிவித்தார். நான் முதல்வராக இருந்தால் ஒருமணி நேரத்தில் இட ஒதுக்கீட்டுக்காக கையெழுத்து போடுவேன் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது ஆனால் இன்னும் தரவுகள் சேகரிப்பதாக கூறுவதாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகமா செய்த கட்சியாக  பாமக உள்ளதாகவும், விசிக பொது தொகுதி கேட்டபோது ஸ்டாலின் தனி தொகுதி இரண்டு தொகுதி மட்டுமே  கொடுத்ததாகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையே சண்டையை மூட்டிவிடுவது திமுகவும், அதிமுகவும் தான் என குற்றஞ்சாட்டினார்.


மயிறு இழையில் சிறைக்கு செல்ல வேண்டியவர் தப்பித்துள்ளார்


திண்டிவனத்தில் அம்பேத்கர் சிலைக்கு செறுப்பு மாலை அனிவிக்க தூண்டியவர் அமைச்சர் பொன்முடி என்றும் மயிறு இழையில் சிறைக்கு செல்ல வேண்டியவர் தப்பித்ததாகவும், இந்தியாவிலேயே மூத்த தலைவர் ராமதாஸ் என மோடி பேசியதாகவும், 2016 தேர்தலில் இரு துணை முதல்வர்களில் இருவர் தலித் என வாக்குறுதி கொடுத்தோம். எடப்பாடி.பழனிச்சாமி, சிவி.சண்முகம் ஆட்டம் எல்லாம் இந்த தேர்தலோடு முடிந்ததாகவும், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது நான் தான் என பழனிச்சாமி கூறுவார்.


பாமகவை பற்றி பேச அதிமுக தகுதி இல்லை.


2019ல் பாமக இல்லை என்றால் பழனிச்சாமி வீட்டிற்கு சென்றிருப்பார். இல்லை என்றால் வீட்டிற்கு சென்றிருப்பார் அப்போது பத்து கோரிக்கை கொடுத்தோம் ஆனால் ஒன்றைக்கூட அவர்  நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டினார். 2019ல் இடஒதுக்கீடு கொடுத்தால் தான் கூட்டணி என கூறியதால் தான் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதாகவும்,  இடஒதுக்கீடு சட்டம் அறைகுறையாக கொண்டுவரப்பட்டு இடஒதுக்கீடு சட்ட நகலை கூட எங்களுக்கு சிவி.சண்முகம் தரவில்லை என கூறினார். கூட்டணிக்கு நாங்கள்  செல்லவில்லை என்றால் நாங்கள் துரோகி, பழனிச்சாமி என்ன தியாகியா என்றும் 66 சட்டமன்ற உறுப்பினர் கொண்ட அதிமுக சட்டமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை பாமகவை பற்றி பேச அதிமுக தகுதி இல்லை.


கமிஷன் கொடுத்தால் தான் வேலை


இரு சமுதாயத்தை முன்னேற விடமாட்டார்கள் திமுக ஆட்சிக்கு வரும் போது நான்கரை லட்சம் கோடி கடன், மூன்று ஆண்டுகளில் எட்டரை லட்சம் கோடி கடன் உள்ளது. அனைத்து துறைகளிலும் சேர்த்து 13 லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளித்து வருகிறது. கமிஷன் கொடுத்தால் தான் வேலை இரு கட்சிகளையும் ஒதுக்கும் நேரம் வந்துவிட்டது. அதிக குடிசைகள் உள்ள மாவட்டமாகவும், தொழில்சாலை இல்லாத மாவட்டமாகவும், டாஸ்மாக் விற்பனையில் முதல் மாவட்டமாகவும் கல்வியில் 38வது இடத்தில் விழுப்புரம் மாவட்டம் உள்ளதாக கூறினார்.


கடந்த தேர்தலில் ஜாக்டோ ஜியோ வீடு வீடாக பிரச்சாரம் செய்தது 550 வாக்குறுதி கொடுத்தது திமுக, பழைய ஓய்வுதிய திட்டத்தை கொண்டு வருவோம் என கூறினார்கள் ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் கொண்டு வரவில்லை ஆனால் 7 மாநிலங்களில் பழைய ஓய்வுதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. திமுகவுக்கு தோல்வியை கொடுத்தால் தான் பயத்தில் திமுக பழைய ஓய்வூதியத்தை கொடுக்கும் என்றும்  விவசாயிகளுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் பாமகதாம் செல்லும். ஏழு விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த திமுக கொடுங்கோல் ஆட்சி செய்து. விவசாயிகள் சிறையில் இருக்கிறார்கள். ஆனால் கஞ்சா விற்பனை செய்தவர் வெளியே இருக்கிறார் ஆனால் கிளி ஜோசியம் பார்ப்பவர் சிறையில் உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.