நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்பமனு தாக்கல் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதேபோல் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இதில் மத்திய அரசு சார்ந்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எண் வேட்பாளர் பெயர் தொகுதி வயது படிப்பு
1 கலாநிதி வீராசாமி  வட சென்னை  54  மருத்துவர்
தமிழச்சி தங்கபாண்டியன்  தென் சென்னை 61 பி.எச்.டி
3 தயாநிதி மாறன் மத்திய சென்னை 57  பி.ஏ
4 டி.ஆர். பாலு  ஸ்ரீபெரும்புத்தூர் 83 பி.எஸ்.சி
5 வி. கணேசன்  காஞ்சிபுரம்  50  எல்.எல்.பி 
6 எஸ். ஜெகத்ரட்சகன் அரக்கோணம்  76 எம்.ஏ டி.லிட்
7 டி.எம் கதிர் ஆனந்த வேலூர் 49  பி.காம் எம்.பி.ஏ
8 ஆ. மணி தருமபுரி 55 பி.காம் பி.எல்
9 சி.என் அண்ணாதுரை திருவண்ணாமலை 51 பி.காம்
10  எம். எஸ்  தரணிவேந்தன் ஆரணி 58 10 ஆம் வகுப்பு
11 தே. மலையரசன் கள்ளக்குறிச்சி  49  பி.காம் டி.கார்ப்
12  டி.எம். செல்வகணபதி  சேலம் 65 எம்.ஏ எல்.எல்.பி
13 கே.ஈ பிரகாஷ் ஈரோடு 48  பி.ஏ
14  ஆ. ராசா நீலகிரி 60 பி.எஸ்சி. எல்.எல்.பி
15  கணபதி ராஜ்குபொமார் கோவை  59 பி.எச்.சி 
16  கே. ஈஸ்வரசாமி பொள்ளாச்சி  47  10 ஆம் வகுப்பு
17  அருண் நேரு  பெரம்பலூர் 40  எம்.எஸ்
18 ச. முரசொலி  தஞ்சாவூர் 45  பி.எஸ்.சி எல்.எல்.பி
19 தங்கத் தமிழ்ச்செல்வன் தேனி 62 எம்.ஏ
20  கனிமொழி தூத்துக்குடி 56 எம்.ஏ
21 ரானி ஸ்ரீகுமார் தென்காசி 49 எம்.பி.பி.எஸ் எம்.டி