வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளை மாற்றம் செய்தும் நியமித்தும் புதுப்பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.


தமிழக பாஜகவின் புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணாமலை உத்தரவின்படி பட்டியல் இறுதி செய்யப்பட்டு,  தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டநிலையில் தேசிய தலைமையின் உத்தரவுப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.




அதன்படி, 59 மாவட்ட தலைவர்கள் , 20 மாநில செயற்குழு உறுப்பினர் ஆகியோரது பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக மாநில பொதுச்செயலாளர்களை நியமனம் செய்வதில் அண்ணாமலைக்கும் மூத்த பாஜக நிர்வாகிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிகழ்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் முதல் கட்டமாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.


பொதுவாகவே தலைவர்கள் மாற்றம் நடைபெறும்போது நிர்வாகிகள் மாற்றமும் நடைபெறுவது வழக்கம். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து கட்சிக்குள் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படவில்லை, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக கூறப்பட்டு வந்ததாகவும் தேர்வு செய்வதில் மூத்த தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. 


400க்கும் மேற்பட்ட பாஜகவின் நிர்வாகிகள் மாற்றம் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் நடைபெறும். அந்த வகையில் நிர்வாகிகளை நியமனம் செய்ய தீவிர ஆலோசனை நடைபெற்று வந்தது. அதன்படி புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.


விரைவில் மாநில துணைத் தலைவர்கள் பட்டியல் மற்றும் பொதுச்செயலாளர்கள் நியமனம் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண