தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், அத்துடன் அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தையும் இணைக்க வேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக மின்சாரத்துறை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியை மும்முரமாக செய்து வருகிறது. இதில், ஏற்கனவே ஆன்லைனில் ஏற்கனவே ஒரு லிங்க் வெளியிடப்பட்டு அதில் பயனர்கள் பதிவேற்றம் செய்து வந்தனர். அடுத்ததாக, மின்சாரத்துறை 2811 சார்பு அலுவலகங்களில் காலை 10.30 மாலை 5.30 மணிவரை விடுமுறை நாட்களை தவிர்த்து சனிக்கிழமைகள் உட்பட இணைக்கப்பட்டு வருகிறது.  முன்னதாக கொடுக்கப்பட்ட மின் இணைப்பு இணையதளங்கள் வாயிலாக மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து வந்தனர். இந்த நிலையில், அதில் சிரமம் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து, தற்போது ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மூலம் பதிவு செய்யப்படும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் மின் இணைப்பு உரிமையாளர், வாடகைதாரர், உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்ற ஆப்சனுடன் 4-வதாக என்.ஆர்.ஐ ஆப்சன் சேர்க்கப்பட்டுள்ளது.


தமிழக மின் வாரியமானது வீடுகளை உள்ளடக்கிய இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் பயனர்களின் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகிறது. இதனுடன் பலர் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவதுடன், புதிய மின் இணைப்பு, மின் இணைப்புபெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர். தற்போது, ஆதார் எண்ணை எளிதாக adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மின் நுகர்வு எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். பின்னர் மின் நுகர்வு பயனர்கள்கள் பெயர் தோன்றும், அதில் ஓனர், வாடகைதாரர், ஓனர் ஆனால் பெயர் மாற்றம் செய்யவில்லை மற்றும் என்ஆர்ஐ ஆகிய ஆப்சன்களின் ஏதேனும் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து பின்னர் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பபடும். அதனை உள்ளிட்டு பிறகு பதிவு செய்ய வேண்டும்.