ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் சாலையில் நடமாடிய சிறுத்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமிருப்பதாகவும், ஊருக்குள் வந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் அவ்வப்போது புகார் எழுவது வழக்கம். இதனை தடுக்க வனத்துறையினரும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிப்பதும், பின்னர் சில வாரங்கள் கழித்து மீண்டும் சிறுத்தை அட்டகாசம் செய்வதும் தொடர்கதையாகி வந்தது. 


கடந்த ஜூலை மாதம் கூட  8 மாதங்களாக  தொட்டகாஜனூர், சூசைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து வளர்ப்பு நாய் மற்றும் ஆடு, மாடு ஆகியவற்றை வேட்டையாடிய சிறுத்தை சிக்கியது. அங்குள்ள  செயல்படாத கல்குவாரியில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினரின் தீவிர முயற்சிக்குப் பின் பிடிப்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறுத்தையை  பவானிசாகர் அருகே மங்கலபதி வனப்பகுதியில் விடப்பட்டது. 






இப்படியான நிலையில் தாளவாடி அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று சாலையில் சுற்றித் திரிந்தது. லோடு வண்டியில் இருந்து வெளிவரும் ஒளியை கண்டதும் சிறுத்தை, பக்கத்து தோட்டத்தில் குதித்து ஓடியது. கால்நடைகளை தேடி அலைந்த நிலையில் சாலையை கடக்க முயன்று போது சிறுத்தை நிற்பதை பார்த்து வாகன ஓட்டிகள் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது வாகன வெளிச்சத்தில் சிறுத்தையை படம் பிடித்தனர்.


அதில் அருகில் இருந்த 6 அடி உயர இரும்பு கேட்டை தாவி குதித்து தோட்டத்துக்குள் புகுந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். 




மேலும் படிக்க: China: காதலுக்கு வந்த சோதனை.. காதலியுடன் ‘லிப் லாக்’ முத்தம்.. கேட்கும் திறனை இழந்த இளைஞர்..!