கோவையில் பிரைடல் மேக்கப் ஸ்டுடியோவை நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் திறந்து வைத்தார்.


அப்போது பேசிய லெஜண்ட் சரவணன், “கோவையில் கலை ரசனை உள்ளவர்களுக்காக பிரைடல் மேக்கப் நூர் நிறுவனத்தை, நூர் முஹம்மது துவக்கி வைத்துள்ளார். அவருடைய கடினமான உழைப்பு பாராட்டத்தகுந்தது.


பொதுவாக நான் கடுமையாக உழைப்பவர்களை,  தொழிலை நேசிப்பவர்களை நான் நேசிப்பேன். எனக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்புகள் இருந்தாலும் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு செல்வதில்லை.


ஆனால் கலைத்துறையாளர்களுக்கு மேக்கப் துறை முக்கிய பங்கு வைக்கிறது. அவற்றை முழுமையாக நேசித்து சேவை செய்து வருகிறார், நூர் முஹம்மது. அவருடைய அன்பால் ஈர்க்கப்பட்டும், அவருடைய கடின உழைப்பை நேசித்து, இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.


கோவை மக்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நடிகர் லெஜண்ட் சரவணன் கூறினார்


நடிகர் லெஜண்ட் சரவணன் கோவையில் செய்தியாளரிடம் பேசும்போது,  கலைத்துறையில் இருப்பவர்கள் அடுத்த கட்டம் அரசியலுக்கு செல்வது குறித்த கேள்விக்கு, அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.


மேலும் தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு,  அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என சரவணன் தெரிவித்தார்.