ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இயக்குநர் கே.வி ஆனந்திற்கு  இரங்கல்

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி ஆனந்த மாரடைப்பால் இன்று காலமானார்.

Continues below advertisement

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார்.  2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். மேலும், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர். சிவாஜி: தி பாஸ்,  செல்லமே, பாய்ஸ், விரும்புகிறேன், முதல்வன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

Continues below advertisement

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார். கே.வி ஆனந்தின் உடல்  அவரது குடும்பத்தினரிடம் இன்று காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக, கல்கி, இந்தியா டுடே, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற முக்கியப் பத்திரிக்கை நிறுவனங்களில் ஃப்ரீலான்ஸ் புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றினார்.

இந்நிலையில் ,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்." என்று தனது வருத்தங்களை பதிவு செய்து இருந்தார் .

மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.
— Rajinikanth (@rajinikanth) April 30, 2021

இதனை அடுத்து ரஜினிகாந்தை தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்துவும்  தனது இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார்.

வருந்துகிறேன் நண்பா!

திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?

விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!

ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.
— வைரமுத்து (@Vairamuthu) April 30, 2021

" வருந்துகிறேன் நண்பா!

திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?

விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!

ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.

என்று கவிதையில் அஞ்சலி செலுத்தி இருந்தார் .

திரைத்துறையினர் பலரும் இவரின் மறைவுக்கு தங்களின் இரங்கலை பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள் . நடிகர் விவேக்கின் அதிர்ச்சியில் இருந்து மீளாத திரைத்துறை மீண்டும் ஒரு இழப்பை சந்தித்து இருக்கிறது .

Continues below advertisement
Sponsored Links by Taboola