தமிழ்நாட்டில் கீழடி கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை என 10 இடங்களில் தற்போது அகழாய்வு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் பர்கூரை அடுத்த தொகாப்பன்னி அருகே உள்ள மயிலாடும்பாறையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் அகழாய்வுப் பணி தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமுடக்கத்தால்  தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதால் அகழாய்வு இந்தப் பணி தடைப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் தளர்வுகளுடன் கூடிய பிறப்பிக்கப்பட்டதால் மீண்டும் அகழாய்வு தொடங்கியுள்ளது.
 



அதனைத்தொடர்நது கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதற்கட்ட அகழாய்வு ஆராய்ச்சி தொடங்கியது, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் அகழாய்வு தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல் மற்றும் சென்னையை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் ஈடுபட்டனர். இந்த அகழாய்வின் போது, கடந்த வாரம் கல்திட்டையில் 70 சென்டி மீட்டர் நீளம் உள்ள இரும்பு வாள் ஒன்றை கண்டுபிடித்தனர்.  மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 சென்டிமீட்டர் அளவில் ஒரு மண்பானை, ஒன்றும் இரும்பு பொருட்கள் கத்தி, கொடுவாய், அரிவாள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இது குறித்து அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது:- பர்கூர் தாலுகா மயிலாடும்பாறையில், சானரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு கிடைக்கும் பொருட்களை டி.என்.ஏ. பரிசோதனை செய்து, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறை கண்டறியப்படவுள்ளது. தற்போது இங்கு பெருங்கற்காலத்தை சேர்ந்த, 70 சென்டி மீட்டர் நீளமுள்ள இரும்பு வாள்  மற்றும் 50 சென்டிமீட்டர் உள்ள மண்பானை  உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்பானையில் என்ன இருக்கு என்பது தெரிவில்லை, இதில் எலும்பு கூடுகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
  



இந்த பொருட்கள்  2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என கருதப்படுகிறது. இதுகுறித்த முடிவுகள் வந்த பிறகுதான் இந்த சரியான காலத்தை கணிக்க முடியும் என தெரிவித்தார். இங்கு தொடர்ச்சியாக அகழாய்வு ஆராய்ச்சி பணிகள் நடைப்பெற்று வரும் இன்னும் பல நூற்றாண்டுக்கு முந்தைய கால நாகரீகத்தை கண்டறிய முடியும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் கண்டறிய முடியும். இது மட்டுமின்றி இவற்றை எப்படியெல்லாம் கண்டறியலாம் என தொல்லியல் பொருட்கள் பெரும்பாலும் ஒருகாலத்தில் அவ்விடங்களிலே குப்பைகளாக விடப்பட்டவையாக இருக்கின்றன. இவை அங்கு அடுத்தடுத்து இடம்பெறும் நிகழ்வுகளினால் அவ்விடத்தில் குவிகின்றன. ஒரு தோட்டக்காரன் பெருக்கிக் குவிக்கும் மண்குவியல், அவன் கற்களைக் கொண்டு அமைக்கும் ஒரு நடைபாதை, பின்னர் அவ்விடத்தில் கட்டப்படும் ஒரு சுவர், இன்னொரு காலத்தில் அங்கு அமையும் ஒரு மாட்டுத் தொழுவம், முன்னர் அமைத்த சுவர் இடிதல் போன்ற ஒவ்வொரு நிகழ்வும் அவ்விடத்திலே ஒரு சூழ்நிலையை விட்டுச் செல்கின்றன. 


இவ்வாறான நிகழ்வுகளின் அடுக்குகள் பொதுவாகத் தொல்லியல் தொடரியம் (archaeological sequence) அல்லது தொல்லியல் பதிவுகள் எனப்படுகின்றன. இத் தொடரியத்தை அல்லது பதிவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமே அகழ்வாய்வு கடந்தகாலத்தைப் புரிந்து கொள்ள முயல்கிறது என்று தெரிவித்தார்