கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த ரத்த சிகரளபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கங்கசந்திரம் கிராமப்பகுதியில் சந்திரபா வயது (60) இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. தனிமையில் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்து விவசாயத்தையும் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு வளர்த்து வந்த ஆடுகளை விற்று விட்டு, புதிதாக 20 வெள்ளை ஆடுகளை வாங்கி கங்கசந்திரம் கிராமப்பகுதியில் மேய்த்து வந்துள்ளார். தற்போது அதில் ஒரு ஆடு சினையாக இருந்து வந்துள்ளது, இன்று மாலை ஆடுகளை  பட்டியில் அடைத்துள்ளார். அதன்பிறகு சந்திரப்பா வீட்டிற்கு சென்று சமையல் செய்துள்ளார். அப்போது பட்டியில் உள்ள ஆடுகள் சத்தம் போட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு பட்டியலுக்கு வந்த  சந்திரப்பா பட்டியில் எட்டிப்பார்த்துள்ளார்.  



அப்போது சினையாக  இருந்த ஆடு கன்று ஈன முயற்சி செய்துள்ளது. அதனைக்கண்ட அவர் அந்த சினை ஆட்டை மட்டும் தனியாக வீட்டிற்கு அருகில் தூக்கி சென்றுள்ளார். வீட்டில் சினை ஆடு ஒரு ஆட்டு குட்டியினை ஈன்றுள்ளது. அந்த ஈன்ற கன்று  தலையில்லாமல் முண்டமாக காது மட்டும் உள்ள நிலையில் ஆட்டுக்குட்டி இறந்த நிலையில் பிறந்துள்ளது. இந்த அதிசய ஆட்டுக்குட்டியினை பார்ப்பதற்காக அந்த கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குவிந்தனர். அதன் பிறகு அந்த தலையில்லாமல் பிறந்த அதிசய ஆட்டு குட்டியினை அங்கு இருந்த பொதுமக்கள் சந்திரப்பாவின் நிலத்தில் புதைத்துள்ளனர். அவர் இதனால் வருந்தியுள்ளார்




இது குறித்து சந்தரப்பாவிடம் பேசுகையில்; 


நான் கங்கசந்திரம் கிராமத்தில் பிறந்தவன் எனது பெற்றோர்கள் விவசாயம் செய்து வந்தனர்.  அப்போது சிறு வயது இருக்கும் பொழுது எங்கள் வீட்டில் ஐந்து ஆட்டுக்குட்டிகள் வாங்கி வளர்த்து வந்தோம். அப்போது ஆடுகள் பெரிய தாக்கிய பின்பு அதனை நாங்கள் விற்று சம்பாதித்து வந்தோம் ,தொடர்ச்சியாக எங்களது குடும்பத்தில் ஆடுகளை வளர்த்து விற்று வருகிறோம். திடீரென இடையில் சிறுவயதாக இருக்கும் போதே எனது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள். அதிலிருந்து நான் தனியாக தான்  வசித்து வருகிறேன். எனக்கு துணையாக எனது ஆடுகள் மட்டும்தான் உள்ளது. நான் வளர்க்கும் அனைத்து ஆடுகளும் ஈன்றும் குட்டிகளை அனைத்தும் எனது சொந்தப் பிள்ளையாக தான் வளர்த்து வருகிறேன். ஆனால் தற்போது எனது ஆடு ஈன்ற குட்டி தலை இல்லாமல் முண்டமாக பிறந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.