பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது முதிர்ச்சி காரணமாக இன்று காலமானார். தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் ஈரோட்டை பூர்வீகமாக கொண்டவர். 1965-ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ படத்தில் ஜெயலலிதாவுடன் கதாநாயகனாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்தின் சினிமா வாழ்வில் முக்கிய படமாக ‘தங்கப்பதக்கம்’ படம் திகழ்ந்தது. அந்த படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீகாந்த் சிவாஜிக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஸ்ரீகாந்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.