பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் 12 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர் ரஜினிகாந்த் நடித்த கபாலி, தனுஷ் நடித்த அசுரன் உள்பட பிரம்மாண்ட படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது. 




மேலும் படிக்க : பயிற்சி முடிந்ததும் பயத்தில் தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்! அடுத்த நாளே ஆர்டர் வந்த கொடுமை!


தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான தாணு மட்டுமின்றி, பிரபல தயாரிப்பாளர்களான ஸ்டூடியோ கிரீன் நிறுவன உரிமையாளர் ஞானவேல்ராஜா, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவன உரிமையாளர் எஸ்.ஆர்.பிரபு. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோரது அலுவலங்ககள் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 


மேலும் படிக்க : பயிற்சி முடிந்ததும் பயத்தில் தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்! அடுத்த நாளே ஆர்டர் வந்த கொடுமை!


தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவரும், கோலிவுட்டின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கலைப்புலி எஸ்.தாணு. கடந்த 1985ம் ஆண்டு முதல் திரைப்பட தயாரிப்பாளராக  தாணு இருந்து வருகிறார். 1985ம் ஆண்டு வெளியான யார் என்ற திரைப்படம் மூலமாக தாணு முதன்முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.




கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், அஜீத், விஜய், மம்முட்டி, சிம்பு, பார்த்திபன், அர்ஜூன், தனுஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.


ரஜினிகாந்தின் கபாலி, விஜயின் தெறி, அஜீத்தின் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், தனுஷின் கர்ணன், அசுரன், ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது, சூர்யா நடிப்பில் வெற்றி மாறன் இயக்கி வரும் வாடிவாசல் படத்தையும் தாணுதான் தயாரித்து வருகிறார்.


மேலும் படிக்க : IT Raid : வரிந்து கட்டும் வருமான வரித்துறை... வரிசையாக சிக்கும் சினிமா தயாரிப்பாளர்கள்: என்ன நடக்கிறது கோலிவுட்டில்?


மேலும் படிக்க : சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் ரெய்டு..! 40 இடங்களில் அதிரடி சோதனை!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண