“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக ’ஆனந்த தீபாவளி’ என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். ஆனந்த தீபாவளியின் 25ஆவது ஆண்டான இந்த ஆண்டில் பல குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இன்று (அக்.16) நடந்த இந்நிகழ்வில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் ஆகிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.


தொடர்ந்து தாங்கள் குழந்தைகளுடன் கொண்டாடிய இந்த தீபாவளி அற்புதமான நிகழ்வு என்று கூறி  “உதவும் உள்ளங்கள்” அமைப்புக்கு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


15 ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில்  பேசிய கிருத்திகா உதயநிதி, இந்நிகழ்வில் தான் கலந்து கொண்டது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இதுபோன்று ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவது நம்முடைய கடமை என்றும் தெரிவித்தார்.


தொடர்ந்து, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கிருத்திகா உதயநிதி,  இது குறித்து நான் யோசிக்கவே இல்லை எனத் தெரிவித்தார்.


 






முன்னதாக கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


 






காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், கவுரி கிஷான், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்திருந்தனர்.