தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் பகுதிக்குட்பட்ட வ.புதுப்பட்டி ஊரில் உள்ள பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி காணாமல் போகியுள்ளது.
இதனால், சாவியை அதிகாரிகள் தேடிப்பார்த்தனர். ஆனாலும், சாவி கிடைக்காததால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. இதையடுத்து, அந்த அறையின் பூட்டை வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள் முன்னிலையில் உடைத்து, வாக்குப்பெட்டிகளை எடுத்தனர். பின்னர், வாக்கு எண்ணிக்கை பணியை தொடங்கியுள்ளனர்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள : TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்