கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சி 100 ஆண்டுகளுக்கு பின் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் முதல் முறையாக நடைபெறும் மேயர் தேர்தல் என்பதால் அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன இதில் 26 இடங்கள் பெண்களும் 26 இடங்கள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

 

26 இடங்களை பிடிக்கும் கட்சி மேயராக தேர்ந்தெடுக்க பட உள்ளனர்.

 

233 வாக்கு பதிவு மையங்களில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 235 இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

 

நடந்து முடித்த தேர்தலில் மொத்தம் 60.94 சதவீதம் வாக்குகள் பதிவானது இதில் ஆண்கள் -74593 , பெண்கள் -76177 என மொத்தம் 1,50,770 வாக்குகள் பதிவானது.

 

ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.



 

கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்கள் :

 

திமுக - 37

 

அதிமுக - 52

 

காங்கிரஸ் - 13

 

பாஜக - 50

 

நா.த.க - 29

 

அமமுக - 18

 

மநீம - 10

 

தமாகா - 2

 

பாமக - 1

 

சிபிஎம் - 9

 

மதிமுக - 2

 

தேமுதிக - 8

 

சுயேட்சை - 121

 

போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் -173

 

போட்டியிடும் ஆண் வேட்பாளர்கள் - 183

 

மேயர் பதவிக்கு பேசப்படும் பெயர்கள் :

 



திமுக சார்பில் நகர செயலாளர் மகேஷ் மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல் உள்ளது.

 

பாஜக சார்பில் 2 முறை முன்னாள் நகரமன்ற தலைவராக இருந்த மீனா தேவ்.

 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நாஞ்சில் முருகேசன் மகள் ஶ்ரீ லிஜா போட்டியிடுகிறார்.

 

பாஜகவில் நீண்ட நாட்களாக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் முத்துராமன்.

 

சமீபத்தில் சிறுபான்மையினரை பாஜகவில் இணைக்கும் விழா நடத்தி மாநில தலைவர் அண்ணாமலையின் கவனத்தை ஈர்த சகாயம் பெயரும் பேசப்படுகிறது.

 

வாக்கு எண்ணும் மையத்தின் விவரங்கள் :

 

வாக்கு பெட்டிகள் அதிகாரிகள், மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் எஸ் .எல். பி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சிக்கான வாக்குகளை எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

 

வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் பகுதியை 2 ஆக பிரித்து மொத்தம் 28 மேஜைகள் அமைத்து வாக்குகள் எண்ணப்படுகிறது , மொத்தம் 10 ரவுண்டுகளில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. 

 

 

இதற்கென 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி என கணிக்க முடியாத தேர்தலாக இந்த தேர்தல் உள்ளது ,அதிமுக மற்றும் பாஜக தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி மூலம் ஒன்று சேர்ந்து திமுகவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றனர் அதே சமையம் , திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து மேயர் மற்றும் துணை மேயர் ஆகிய பதவிகளை பெற முயற்சிகள் செய்து வருகின்றனர்.