திமுக கண்டன பொதுக்கூட்டம்
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மார்ச் 12ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு. 'தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்' என்ற தலைப்பில் நடைபெறும், திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.
சென்னை மெட்ரோ - தொழில்நுட்பக்கோளாறு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, CMRL WhatsApp டிக்கெட் சேவை தற்காலிகமாக வேலை செய்யவில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல். மற்ற இணையவழி சேவைகளைப் பயன்படுத்தி டிக்கெட் எடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தல்
₹80 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு சுமார் ₹80 கோடி மதிப்பிலான போதைப் பொருளைக் கடத்திச் சென்ற இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 பேர் உட்பட 11 பேரிடம் விசாரணை. கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ 'ஹசீஸ்' என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடுக்கடலில் வைத்து பறிமுதல் செய்தனர். இதில் (துறைமுகப் பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்.
இன்று அரங்கேற்றம் செய்கிறார் இளையராஜா..!
லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் ‘வேலியன்ட்' என்ற தலைப்பில் உருவாக்கிய 'சிம்பொனி'யை இன்று அரங்கேற்றுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. “சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை!” என நடிகர் ரனிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து.
சர்வதேச மகளிர் தினம் - தலைவர்கள் வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தலைவர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்ட பல பெண்கள் இன்று கையாள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நாளில் திமுக அரசை மாற்றுவோம் என உறுதியேற்போம் என, தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.41 ஆயிரம் கோடிக்கு லாட்டரி விற்பனை
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை சுமார் ₹41,000 கோடிக்கு லாட்டரி விற்கப்பட்டுள்ளதாக RTI தகவல். 2021 ஏப்ரல் முதல் 2024 டிசம்பர் 31 காலகட்டங்களில் ₹41,138.45 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் ₹11,518.68 கோடி அரசுக்கு வரி வருவாய் ஆகவும், ₹2,781.54 கோடி லாபமாகவும் கிடைத்துள்ளதாக தெரிவிப்பு
ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை விவகாரம்
தொழில்நுட்பக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த 3 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும்.இவ்வாறு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கொண்டிருக்கும் வாக்காளர்களுக்கு ஒரு தனித்துவமான தேசிய வாக்காளர் அடையாள அட்டை எண் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் எதிர்கால வாக்காளர்களுக்கும் பயன்படுத்தப்படும் - தேர்தல் ஆணையம்
வரியை குறைக்க ஒப்புக்கொண்ட இந்தியா
“இந்தியாவில் எங்களால் எந்த பொருட்களையும் விற்க முடியவில்லை, அந்த அளவிற்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது யாரோ இதை அம்பலப்படுத்தியதால் வரிகளை வெகுவாக குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது!” - இந்தியாவின் வர்த்தக வரி விதிப்பு குறித்து அதிபர் ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்
சாம்பியன்ஸ் ட்ராபி - நாளை ஃபைனல்
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான, ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.
அச்சுறுத்தலாக இருக்கும் வருண் சக்ரவர்த்தி..
”சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நியூசிலாந்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். அவருடைய ஓவரில் எப்படி ரன் குவிக்க முடியும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்" -கேரி ஸ்டீட், நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர்