நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதில் தலை வர் தனபதி தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- இந்திய பொருளாதாரத்துக்கு பல வகையில் உறுதுணை யாக இருந்து வருவது ஜவுளி தொழில். இப்படிப்பட்ட ஜவுளி தொழில் நூல் விலை உயர்வால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.பருத்தியை மீண்டும் அத்தியாவசிய பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும். நூல் மில்கள் மொத்த உற்பத் தியில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு தேவை பூர்த்தி அடையும்.
அத்தியாவசிய பட்டியல் பஞ்சு விலை உயர்ந்தால் விவசாயிகளுக்கு லாபம்தான். ஆனால் இயற்கையான விலை உயர்வு அல்லது விவசாயிகளுக்கு லாபம் கொடுக்க ஏற்பட்ட விலை உயர்வோ அல்ல. விவசாயிகள் பஞ்சு விற்கும் விலைக்கும், நூல் மில்களுக்கு வரும் பஞ்சின் விலைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வித்தியாசம் உள்ளது. சி.சி.ஐ.யிடம் ஒரு பேல் ரூ 44 ஆயிரத்திற்கு வாங்கி அதே பஞ்சு நூல் மில்களுக்கு ரூ.95 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. எனவே நூல் மில்களை கட்டுப்படுத்த வேண்டும். பஞ்சை அத்தியாவசியபட் டியலில் சேர்ப்பது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நிலையில் இன்று பல கஷ்டத்திலும் தொழில் செய்து வருகிறோம். மத்திய, மாநில அரசுக்கும், துறைசார்ந்த அமைச்சர்களுக்கும் இதை வலியுறுத்தி வருகிறோம்.
இதையடுத்து, அரசுகளின் கவனத்தை ஈர்க்க வருகிற 13-ஆம் தேதி கரூரில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாதம் இறுதிக்குள் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால், நம் முதலீடு பாதுகாப்பு கருதி உற்பத்தி நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் செயலாளர் சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.