ஃபோர்டு  இந்தியா கடந்த வருடம் செப்டம்பர் 9ம் தேதி உற்பத்தியை நிறுத்துவதாக டிவிட்டர் வாயிலாக அறிவித்தது. ஃபோர்ட் மறைமலை நகர் தொழிற்சாலையில் 4000 நிரந்திர தொழிலாளர்களும், அதை சார்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துவதாக கடந்த வருடம் அறிவித்தபோது தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஃபோர்டு  நிரந்தர பணியாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கார் உற்பத்தி நிறுத்தம் தொடர்ந்தது.



ஃபோர்டு  இந்தியா நிறுவனம் இந்த வருடம் ஜூன் இறுதிக்குள் மறைமலைநகர் தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்திருந்தது.  மறைமலை நகர் தொழிற்சாலையில் எக்கோ ஸ்போட் கார் உற்பத்திக்கான பணிகள் மட்டும் நடைபெற்றன. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். ஃபோர்டு  நிர்வாகம் குறிப்பிட்ட ஜூன் மாதம் நெருங்கி வரும் நிலையில் தொழிலாளர்களுக்கான ஊதியம், ஊக்கத்தொகை, வைப்புத்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர், ஆனால் நிரந்தரப் பணியாளர் சங்கத்தினர் பல வருடமாக இந்த துறை சார்ந்து வேலை பார்த்து வருவதால் எங்களுக்கு வைப்புத் தொகையை விட நிரந்தர பணி அவசியம் என்று தெரிவித்தனர்.

 

இந்நிலையில்  கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு மின்சார வாகண உற்பத்தியை ஊக்கப்படுத்த PLI (Production Linked Incentive) Scheme வயிலாக சுமார் 20 வாகன தயாரிப்பு நிறுவணங்களை தேர்ந்தெடுத்தது அதில் ஃபோர்டு நிறுவனமும் ஒன்று.  இது தொடர்பாக ஃபோர்டு APA ( Asia Pacific & Africa) ஆசிய பசிபிக் மற்றும் ஆப்பிரிக்க செய்திதொடர்பாளர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்தியாவில் நிச்சயம் மீண்டும் ஃபோர்டு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்வோம் என்று அறிவித்தார். அது முதல் நாளே தொழிலாலர்கள் நிர்வாகத்திடம் மின்சார வாகன உற்பத்தி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டு வந்தனர்.



இந்நிலையில் நிர்வாகமும் சரியான பதிலை தராமல் மழுப்பிகொண்டும், காலம்தாழ்த்திக்கொண்டும் தொழிற்சாலைகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஜூன் மாதத்தொடு உற்பத்தி முடிய போகும் தருவாயில்,  உள்ள நிலையில் மின்சார வாகனம் குறித்த முறையான தகவல்களை பரிமாற வேண்டும் என நேற்று முன்தினம் மாலையில் இருந்து தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின்சார வாகனம் குறித்த தகவல் கூறினால் ,மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் எனவும் திட்டவட்டமாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.



 

இந்தநிலையில் தொழிலாளர் துறை இணை ஆணையர், கோட்டாட்சியர் ,வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் ஊழியர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் உரிய பதிலை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து 5 பேர் கொண்ட குழுவினர் நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையில், வருகின்ற திங்கட்கிழமை முறையான தகவல்களை தெரிவிப்பதாகவும், அந்த அறையில் மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படுகிறதா இல்லையா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என உத்தரவாதத்தை அளித்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனைத் தொடர்ந்து 30 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு திங்கட்கிழமை முறையாக பதிலளிக்கவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.