மாயனூர் அணையின் தண்ணீர் நிலவரம்
காவிரியில் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 15 ஆயிரத்து, 94 கன அடி தண்ணீர் வந்தது. மாயனூர் கதவணைக்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 12 ஆயிரத்து, 954 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதி சாகுபடி பணிக்காக, 11 ஆயிரத்து, 434 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில் 1,520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில், மாயனூர் கதவணையில் இருந்து 11 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 11 ஆயிரம் கன அடி திறந்ததினால், மாயனூர் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். டெல்டா பாசன பகுதி சாகுபடிக்கும், நான்கு பாசன வாய்க்கால்களில் தண்ணீரும் திறக்கப்பட்டது இதனால் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
அமராவதி அணையின் தண்ணீர் நிலவரம்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 310 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 313 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 80.88 அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரிய ஆண்டாள் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 243 கன அடி தண்ணீர் வந்தது.
நங்காஞ்சி அணையின் தண்ணீரின் நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடக்காடு மலைப் பகுதிகளில் மழை காரணமாக காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 40 கன அடி தண்ணீர் வந்தது. 39. 37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 33.76 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணையின் தண்ணீரின் நிலவரம்
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.94 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணைப் பகுதிகளில் 11.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் க.பரமத்தியில் 22 மில்லி மீட்டரும், குளித்தலையில் 10 மில்லி மீட்டரும், கிருஷ்ணராயபுரத்தில் 3 மில்லி மீட்டரும், மாயனூரில் 2 மில்லி மீட்டரும், பஞ்சபட்டியில் 9.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. கரூரில் மழை இல்லாததால் விவசாயிகள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். மாயனூரில் 2 மில்லி மீட்டர் மழை வந்ததால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.