கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தெரு ஒன்றுக்கு அமைச்சர் உதயநிதியின் பெயரை வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாநகராட்சியில் நடந்த கவுன்சிலர் கூட்டத்தில் தெரு ஒன்றுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதியின் பெயரை வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுகவினர் வாய் மூடி மௌனம் காத்ததாக கூறப்படுகிறது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பேரனும், தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவிகளை கொடுத்தனர். சமீபத்தில் அமைச்சரவையிலும் அவர் சேர்க்கப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
இதில் 36-வது வார்டு திமுக கவுன்சிலர் வசுமதி கரூர் மாநகராட்சி 36-வது வார்டில், மனக்களம் தெரு, என்று பதிவேட்டில் உள்ளது. அந்த பெயரை நீக்கிவிட்டு உதயநிதி முதல் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தேதி என பெயரை மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு திமுகவின் 46 கவுன்சிலர்களும் ஆதரவு அளித்தனர். மேலும் அதிமுகவின் இரு உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்காமல், மௌனமாக இருந்ததால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாநகராட்சியில் 20. 12. 2022-ம் தேதி அன்று நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் திருமதி வசுமதி 36வது வார்டு உறுப்பினர் அவர்களால் கரூர் மாநகராட்சி 36வது வார்டு பகுதியில் மனக்கலம் தெரு என்ற மாநகராட்சி பதிவேட்டில் உள்ளது எனவும் மேற்படி பெயரை நீக்கிவிட்டு உதயநிதி ஸ்டாலின் முதல் தெரு, இரண்டாவது தெரு, மூன்றாவது தெரு என்ற பெயரை மாற்றி கொடுத்து மாநகராட்சி பதிவேட்டில் இயற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக கரூர் மாநகராட்சி மாமன்றம் தீர்மானிக்க வேண்டும். எனக் கூறிவைக்கப்பட்டது. மாமன்ற கூட்டத்தில் திருமதி வசுமதி 37 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அவர்களால் முன்மொழிந்த கோரிக்கை சம்பந்தமாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் ஏற்கனவே உள்ள மனக்கலம் தெருவின் பேரில் இவ்விதம் மாற்றவும் இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.