கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாயாரால் வளர்க்க இயலாத பெண் குழந்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக மீட்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன் முன்னிலைப்படுத்தப்பட்டது.
இக்குழந்தைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வெண்பா என பெயர் சூட்டினார். பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளுதல் பொருட்டு குழந்தை வெண்பா குழந்தைகள் நல குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டு சேலம் சிறப்பு தத்து வள மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தை சிறப்பு தத்துவள மையத்தில் பராமரிக்கப்பட்டு குழந்தை இல்லாத பதிவு பெற்ற தம்பதியருக்கு முறையாக அரசு மூலமாக தத்து வழங்கப்படுவார் என ஆட்சியர் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சீனிவாசன், தனித்துணை ஆட்சியர்(சபாதி)திரு.சைபுதீன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர். திருமதி.குணசீலி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை ஜூடோ (Judo) பயிற்சிக்கான “SDAT - விளையாடு இந்தியா மாவட்ட மையம் கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். த.பிரபுசங்கர் தெரிவிக்கையில், “விளையாடு இந்திய மாவட்ட மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதிற்குட்பட்ட ஜூடோ (Judo) வீரர்/வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போது கரூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஜூடோ (Judo) விளையாட்டில் சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயற்சிக் கட்டணமாக ரூ.18.000 (ரூபாய் பதினெட்டாயிரம் மட்டும்) வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.
இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat..tn.gov.in) 21.12.2022 முதல் 03.01..2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி. விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள் , பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு மாலமநாயக்கன் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகம், மாவட்ட விளையாட்டரங்கம், கரூர் அலுவகத்திலோ (அல்லது) தொலைபேசி எண். 7401703493 (அல்லது) 9444753260 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே கரூர் மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த ஜூடோ (Judo) விளையாட்டு வீரர்/ வீராங்கனைகள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.