அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த தனது மகனை கொரோனா நோயாளியுடன் ஒரே அறையில் வைத்து சிகிச்சை அளித்ததாக தந்தை பரபரப்பு புகார் - ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில் அலட்சியமாக உள்ள மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை. 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனை அமைந்துள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் என்ற நபர் தனது மகனுக்கு மருத்துவ உதவி வேண்டி அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். 




11 வயது சிறுவனுக்கு லேசான காய்ச்சல்  இருப்பதால் ஊசி போட வேண்டும் என கூறி மருத்துவர்கள் தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதே அறையில் மற்றொரு நபர் சிகிச்சைக்காக வந்துள்ளார் அவர் நீண்டநேரம் இருமிக் கொண்டு அதை அறிந்த கணேஷ்குமார் அவரிடம் விசாரித்தபோது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை உடனடியாக தனது மகனை மீட்டு அப்போலோ மருத்துவமனை அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில் வளாகத்தில் செல்போன் மூலமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 


அந்த வீடியோ பதிவில் பாதிப்புக்குள்ளான நபருடன் தனது மகனையும் வைத்து பரிசோதனை செய்தது கண்டனத்துக்குரியது எனவும், மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து செல்போன் மூலமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். 




மேலும், இதுதொடர்பாக கணேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒமிக்ரான் வகை வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு நிகழ்வுகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.