கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றயத்திற்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் ஊராட்சியில் உள்ள ஆர்.புதுக்கோடை, வளையல்காரன்புதூர் மற்றும் பழையஜெயகொண்டம் சோழபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் ஒத்திகை நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 21 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 77 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து ரெங்கநாதபுரம் ஊராட்சியில் உள்ள ஆர்.புதுக்கோடை, வளையல்காரன்புதூர் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மற்றும் பழைய ஜெயகொண்டம் சோழபுரம் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தின் ஒத்திகை நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உணவு அருந்தி உணவின் தரத்தினை பரிசோதனை செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நிலாக்குமார், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, ராஜேந்திரன், ரெங்கநாதபுரம் ஊராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.