கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், தலைமையில் வாராந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


 




 


அதில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொது விநியோக திட்டத்தில் செயல்படும் நியாய விலை கடைகளுக்கு வரும் உணவுப் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக புகார் செய்ய வேண்டும். நியாய விலை கடைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர்களை அன்பாக நடத்த வேண்டும். விரைவாக பொருட்களை கொடுத்து அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரதி மாதமும் 18-ஆம் தேதிக்கு முன்னதாக சேமிப்பு கிடங்கில் இருந்து கடைகளுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டதை வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்திட வேண்டும். மின்னணு குடும்ப அட்டைகளை தவற விட்டவர்கள் மற்றும் சேதம் அடைந்தவர்களுக்கு உடனடியாக நகல் குடும்ப அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வட்ட அளவிலான வழங்கல் அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளை அதிக அளவில் ஆய்வு மேற்கொண்டு உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண