தென்னிலை நால்ரோடு பிரிவு பகுதியில் இரவு நேரத்தில் கனரக வாகன ஓட்டிகளிடம் காவலர் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.


கரூர் மாவட்டம் தென்னிலை காவல் நிலைய அதிகாரிகள் தென்னிலை நால்ரோடு பிரிவு பகுதியில் இரவு பணியில் ஈடுபட்டு வருகின்றன. கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்கின்றது.


இந்த நிலையில் அவ்வழியாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களிலும் சட்ட விரோதமாக பணம் வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில் தென்னிலை நால்ரோடு பகுதியில் இரவு நேரத்தில் செல்லும் கனரக வாகன ஓட்டிகளிடம் காவலர் ஒருவர் பணம் வசூலில் ஜரூராக ஈடுபட்டு வருகிறார்.


 




குறிப்பாக கனரக வாகனங்களில் வரும் ஓட்டுனர்கள், போலீசாரை பார்த்தவுடன் பணத்தை எடுத்து தரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 




எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண வசூலில் ஈடுபடும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா? இதுவே பொதுமக்கள், வாகன ஒட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.


கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உள்நோயாளி ஆண்கள் பிரிவு கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.


பராமரிப்பு இன்றி இருக்கும் கழிவறையை சரி செய்து நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.


 




கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கரூர் மாவட்டம் மக்கள் அல்லாமல், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் மாவட்ட மக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த  4 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால் மருத்துவமனை கழிவறைகள் துர்நாற்றத்துடன் இருப்பதாகவும், தண்ணீர் இல்லாததாலும், தண்ணீர் பைப்கள் உடைந்தும் இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 6வது தளத்தில் ஆண்கள் பிரிவு உள்நோயாளிகள் பிரிவில் உள்ள கழிப்பறை மிக மோசமான நிலையில் இருப்பதால் அவற்றை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண