காஞ்சிபுரம் மாவட்ட ஜிம்நகர் பகுதியில் வசிப்பவர்கள் ஸ்டீபன் சுகுணா தேவி வயதான தம்பதியினர். இவர்களுக்கு சொந்தமாக 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் மனை இருந்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் உத்திரமேரூர் மானாமதி பகுதிகளில் செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முகவராக இருந்த நிலையில் ஸ்டீபன் மற்றும் சுகுணா தேவி தம்பதியிடம் அவர்களின் வீட்டை 26 லட்ச ரூபாய்க்கு விலை பேசி, 6 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து பத்திரப்பதிவு செய்து கொண்டு மீதமுள்ள, 20 லட்ச ரூபாய் பணத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வட்டியை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்துள்ளார். அவ்வாறு நீங்கள் முதலீடு செய்தால் பல லட்சம் உங்களுக்கு கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி அந்த தம்பதியினரை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் மோசடி செய்ய வைத்துள்ளார்.
நாகராஜன் என்ற ஏஜென்ட்
இந்நிலையில் முறைகேடுகளில் சிக்கிய நிலையில் ஆருத்ரா நிறுவனம் மூடப்பட்டு, அதன் முகவர்களும் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்கள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முகவராக இருந்த நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வயதான தம்பதிகளான ஸ்டீபன் சுகுணா தேவி தம்பதியினர் தங்கள் வீட்டிலேயே வசித்து வந்தனர்.
அடியாட்களுடன் புகுந்த நாகராஜ்
இந்நிலையில் தற்பொழுது ஜாமினில் வெளிவந்துள்ள ஆருத்ரா நிதி நிறுவன முகவர் நாகராஜ் தனது அடியாட்களுடன், சென்று முதியவர்கள் தங்கி இருந்த, வீட்டிலிருந்து அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து வீசிவிட்டு வீட்டைக் பூட்டிக்கொண்டு சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசில் புகார் தெரிவித்தின் பேரில் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல கோடி ரூபாய்
மேலும் நாகராஜன் காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி, பெருநகர், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்களிடமும், அதே போன்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தூசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம், ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு ஏதேன்டாக செயல்பட்டு சுமார் பல கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. நாகராஜனுக்கு பல சொத்துக்கள் இருந்தாலும், அவர் பினாமி பெயரில் அந்த சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதாகவும் , அதனால் அந்த சொத்துக்களை காவல்துறையினர் முடக்க முடியாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வண்ணம் உள்ளன.
சமீபத்தில் நாகராஜன் காஞ்சிபுரத்தில் தனது தந்தை உயிரிழப்புக்கு வந்த பொழுது பவுன்சர் மற்றும் அடியாட்களை அழைத்து வந்து தந்தைக்கு பாதுகாப்பான முறையில் இறுதி சடங்கு செய்துவிட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு வயதான தம்பதியினர், ஆருத்ரா , நிதி நிறுவன முகவரிடம் வீட்டை விற்று, பணத்தையும் இழந்த நிலையில், வீட்டை விட்டு பொருட்களை அள்ளி வீசி விட்டு சென்ற சம்பவம் ஜெம்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கி உள்ளனர்.
கைது நடவடிக்கை
இது தொடர்பாக வயதான தம்பதியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வயதான தம்பதியர் நிலையம் இருந்து , வீட்டை பிடுங்குவதற்கு காவல்துறை சார்ந்த நபர் உதவியது தெரிய வந்ததால், அவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அலைபேசியை கைப்பற்றி whatsapp கால் மற்றும் டெலிகிராம் மூலம் உரையாடல்கள் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெஸ்லி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நடவடிக்கை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.