விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் நுழைய ஒரு தரப்பினர் சம்மதம் தெரிவித்தனர். விரைவில் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பழனி பேட்டியளித்தார்.


விழுப்புரம் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பட்டியலின மக்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாத நிலையில் கடந்த மாதம் 7ஆம் தேதி மாலை கோயில் தேர் திருவிழாவின் போது பட்டியலின இளைஞர்கள் சிலர் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதனால் பட்டியலின மக்கள் மீது ஒரு தரப்பினர் தாக்குல் நடத்தினர். இதனால் அன்று இரவு விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் பட்டியலின மக்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வளவனூர் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர்.


தொடர்ந்து விழுப்புரம் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து இரண்டு முறை சமாதானம் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் (24-05-23) இரண்டாவது முறையாக இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளார் பொறுப்பு மோகன்ராஜ், விழுப்புரம் வட்டாச்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் சம்மதம் தெரிவித்தனர்.


கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பழனி:


மேல்பாதி கிராமத்தில் இருசமூகத்தினரிடையே கோயிலுக்கு செல்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இரு தரப்பினரை அழைத்து நேற்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்து செல்வது தொடர்பாக இருதரப்பினரும் பேசி அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.  இப்போதைக்கு பட்டியலின மக்கள் கோயிலுக்கு அழைத்துசெல்வது தொடர்பாக மட்டுமே பேசப்பட்டது.  அதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஆவனங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தேவைப்படும் பட்சத்தில் குழு அமைத்து கண்காணிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர